• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊரடங்கில் உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு விலக்கு – தமிழக அரசுக்கு டாக்ட் நன்றி

January 7, 2022 தண்டோரா குழு

ஊரடங்கில் உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அளித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. மேலும் தொழில் துறை சார்ந்த தொழிலாளிகள் கட்டாயமாக வேலைக்கு செல்லும்போது அடையாள அட்டை வைத்து இருக்க வேண்டும் என்று அரசு வழிகாட்டி உள்ளது.

எங்களை போன்ற குறுந்தொழில் முனைவோர்களுக்கும், பணிபுரிகின்றவர்களுக்கும் பெரும்பாலும் அடையாள அட்டை இருப்பது இல்லை. இந்த சூழ்நிலையில் இரவு பணி முடிந்து வீட்டுக்கு போகும் தொழிலாளிகள் மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையில் மாவட்ட நிர்வாகம் கோவையில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உதவிட வேண்டும்.

கடும் நெருக்கடிகளை குறுந்தொழில் முனைவோர் சந்தித்து வரும் நிலையில் தொழில் தடையில்லாமல் இயங்கிட தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க