• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மா உணவகம் மூடப்படாது – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

January 7, 2022 தண்டோரா குழு

எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கடைசி நாளான இன்று, பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளித்த அதிமுக உறுப்பினர்களுக்கு நன்றி. கொரோனாவை ஒழிக்க துரிதமாக அரசு இயங்குவதாக பாராட்டிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கும் நன்றி.ஃபாஸ்கான் ஊழியர்கள் தங்குவதற்கு வல்லம் வடகாலில் தங்கும் விடுதி அமைக்கப்படவுள்ளது ; இது 15 மாதங்களில் முடிவடையும்.அம்மா மினி க்ளினிகை மூடிவிட்டோம், அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலை படித்தார்.

இதுபோன்ற பட்டியல் என்னிடம் நிறையவே இருக்கிறது.திமுக அரசு கட்டிய ஓமந்தூரார் தலைமைச் செயலகத்தை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மருத்துவமனையாக மாற்றியது யார்? செம்மொழிப்பூங்காவில் கருணாநிதி பெயர் மறைக்கப்பட்டது.கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக பெரியார் சமத்துவபுரம் பாழடிப்பு.
உழவர் சந்தைகளை மூடியதும் வரும் முன் காப்போம் திட்டத்தை முடக்கியதும் யார் என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம்.அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்.
அதனால்தான் ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவித்தேன். ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்க