• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

January 6, 2022 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து,கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை கர்நாடகாவில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.இதையடுத்து, ராஜேந்திர பாலாஜியை வரும் 20-ம் வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க