January 6, 2022
தண்டோரா குழு
கோவை குறிச்சி பகுதியில் வெங்கடாஜலபதி நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டு மனை இடம் உள்ளது. இந்த இடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் முட்புதராக இருந்தது. இதனால் அப்போது அருகில் இருந்த வீடுகளின் கழிவுநீர் இந்த இடத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
தற்போது இந்த வீட்டு மனையில் வீடு கட்ட நனைக்கும் மக்கள் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதால் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். எனவே இப்பகுதியில் செல்லும் சாக்கடை கழிவு நீரை முறைப்படுத்தி திருப்பி விட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.