• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை 10 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு !

January 5, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 42,266 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.ச.சமீரன், ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இன்று வெளயிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15,40,901 ஆண்கள், 15,91,654 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 573 ஆக மொத்தம் 31,33,128 வாக்காளர்கள் உள்ளனர். 18 முதல் 19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 42,266 வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க