• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனாவுக்கு மத்தியில் மிரட்டும் டெங்கு காய்ச்சல் !

January 5, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனாவை விட டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட மொத்தம் 47 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து உள்ளனர். அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் மட்டுமே கணக்கில் காட்டப்படுகிறார்கள். ஆனால் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் கோவையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்படி பார்க்கும்போது கோவை மாவட்டம் முழுவதும் தினசரி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 200-யை தாண்டும் என கூறப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 40-க்கு மேற்பட்ட இடங்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமான தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி பகுதிகளில் வார்டுக்கு 15 பேர் வீதம் 1,500 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல புறநகர் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கும் டெங்கு காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் அபேட் மருந்து தெளித்தும் கொசு மருந்து அடித்தும் தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கொரோனா பாதிப்பும் கோவையில் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100-க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 120 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும் மிரட்டி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க