• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பரை கைது செய்த கோவை போலீசார் !

January 4, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 31.12.2021 ம் தேதி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த புகார்தாரர் ஒரு YOUTUBE CHANNEL நடத்தி வந்துள்ளார். அதில் விழிப்புணர்வு மற்றும் சினிமா அப்டெட் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சுப்புலட்சுமி ( எ ) ரவுடி பேபி சூர்யா நடத்தி வரும் Surya Media மற்றும் சிக்கந்தர்ஷா ( எ ) சிக்கா நடத்தி வரும் Singer Sikka Official என்ற YOUTUBE CHANNEL களில் புகார்தாரரை பற்றி மிகவும் இழிவாகவும் ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும் இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு கொண்டிருக்கும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா ( எ ) சிக்கா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரைப் பெற்று கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294 ( b ) , 354 ( A ) , 354 ( D ) , 509 109 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகள் 66 ( D ) , 67 IT ACT 2000 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் சட்டப்பிரிவு 4 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு சம்மந்தமாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ர.சுதாகர் உத்தரவின் பேரிலும் கோவை சரக காவல்துறை துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி அறிவுறையின் பேரிலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஹாசினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் S. ஜெயதேவி மற்றும் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் சகிதம் 04.01.2022 ம் தேதி மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று செல்போன்களை ஆய்வுக்காக கைப்பற்றியும் கைதிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும் இவர்கள் சமூக வலைதளங்களில் சமூகத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதனால் சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லக்கூடும் என்பதால் இவர்களது youtube channel களை முடக்குவதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்று சமூக வலைதளத்தில் சமூக நலனையும் இளைஞர்களையும் சீர்கெடுக்கும் தவறான கருத்துக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களை பதிவிடுவோரின் சேனல்கள் முடக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் .

மேலும் படிக்க