January 1, 2022
தண்டோரா குழு
உலக மகளிர் தினவிழா அன்று அவ்வையார் விருது வழங்கிட சிறந்த சேவை புரிந்த பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
அரசு அலுவலர்கள் இவ்விருதிற்கு தகுதியுடையவர் இல்லை. தகுதிவாய்ந்த பெண்கள், விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலரிடம் வரும் 7ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.