ஒரு சினிமா நடிகர் அல்லது ஒரு விளையாட்டு பிரபலம் ஆகியோருக்கு லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்து பார்த்திருப்போம் ஆனால் ஒரு அரசு அதிகாரிக்கு இதுவரை இவ்வளவு ரசிகர்கள் இருந்து பார்த்ததில்லை.
அவர் பிரதமரோ அல்லது முதல்வரோ இல்லை வானிலை ஆய்வு மைய இயக்குநர்தான் அவர். அவரது கண்ணீர் குரலில் இன்று வானம் மேகக்கூட்டத்துடன் காணப்படுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய கூடும் என்று தொலைக்காட்சியில் குரல் கேட்கிறது என்றால் நம் எல்லோருக்கும் தெரியும் அது வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் குரல் தான் என்று.
இது போன்ற பல நாடுகளில் வானிலை இயக்குநர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் தமிழகத்தில் இவரது ரசிகர்கள் போல் எங்கும் கிடையாது. மற்ற மாநிலம் அல்லது நாடுகளில் வானிலை ஆய்வு மைய இயக்குநர்களை விவசாயிகள் மட்டும் தான் எதிர்பார்த்திருப்பார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் பள்ளி மாணவ மாணவிகள், அவர்களது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் என அனைத்து வயதினரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இது தான் அவரது சிறப்பம்சம்.
தமிழகத்தில் அவரைத் தெரியாத ஆட்களே கிடையாது.
அவரது குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இங்கு உள்ளனர். குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எப்போது ரமணன் குரல் கேட்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் வானிலை அறிவிப்பில் பள்ளி, கல்லூரி விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை நிறைவு செய்த ரமணன் சென்னை பல்கலைக்கழகத்தில் வேளாண் வானிலை ஆய்வியலில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும், புதுடெல்லி, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வானிலை ஆய்வு குறித்த பணிகள் மேற்கொண்டார்.
கடந்த வருடம் சென்னையை புரட்டி எடுத்த கனமழை குறித்து உரிய நேரத்தில் தகவல்கள் கொடுத்தார். மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியும் வானிலை ஆய்வு அறிக்கை செய்தியை மக்களுக்கு தவறாமல் தெரிவித்து வந்தார்.
இதனால் தமிழக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார் ரமணன். பழகுவதற்கு எளியவராகவும், பத்திரிகை மற்றும் ஊடகத் துறைக்கு நன்கு ஒத்துழைப்பு அளிப்பவராகவும் திகழ்ந்தார் அவர்.
இந்தநிலையில் நாளை மார்ச் 31 தேதி தனது பணியில் இருந்து ஓய்வு பெற போவதாக ரமணன் அறிவித்துள்ளார். இந்தச் செய்தி மக்களுக்கு வருத்தமாக இருந்தாலும் அவர் ஓய்வுக்குப் பின் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வானிலை ஆய்வு குறித்த வகுப்புகள் எடுக்கப் போவதாக அறிவித்திருப்பது சற்று ஆறுதல் தரும் செய்தியாகத் தான் உள்ளது.
அவரது ஓய்வு காலம் சிறப்பாக அமைவதற்கு அனைத்து மக்களும் இறைவனை வேண்டி வருகின்றனர் என்பது மட்டும் உண்மை.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு