• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூய்மை தொழில்நுட்ப சவால்களுக்கு தீர்வு கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு கோவை மாநகராட்சி அறிவிப்பு

December 30, 2021 தண்டோரா குழு

தூய்மை தொழில்நுட்ப சவால்களுக்கு தீர்வு கண்டுபிடித்தால் முதல் பரிசாக ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு நகராட்சி நிர்வாக ஆணையரகம், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் மற்றும் கோவை மாநகராட்சி ஆகியவை இணைந்து தூய்மை தொழில்நுட்ப சவால்களான சமூக உட்சேர்க்கை, பூஜ்ஜிய திணிப்பு, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிக்கு சிறந்த தீர்வுகளை உருவாக்குவதற்கு தனி நபர்கள், பொது மக்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்களது தீர்வுகளை எதிர்வரும் ஜனவரி 6ம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கலாம்.

தீர்வுகளை அனுப்பும்போது தலைப்புகளை குறிப்பிட்டு அனுப்பவும். பெறப்பட்ட தீர்வுகளிலிருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து தமிழக அரசிற்கு அனுப்பி வைத்து அதன் மூலம் தேர்வு செய்யப்படும் சிறந்த தீர்வுகளுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.2.50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1.50 லட்சமும், நான்காம் பரிசாக ரூ.1 லட்சமும், ஐந்தாம் பரிசாக ரூ.75 ஆயிரமும் வழங்கப்படும். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க