December 29, 2021
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஜனவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை துவங்கும் நிலையில் உள்ளது. முன்னதாக, கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி நகை, பணம் பறிப்பில் சிலர் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. தொடர்ந்து, சிபிஐ விசாரணையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.