December 27, 2021
தண்டோரா குழு
கோவையில் போலீசாரின் சோதனையில் ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகரில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கோவை மாநகரில் கடைவீதி, ஆர்.எஸ்.புரம், வெறைட்டிஹால் ரோடு, பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் மாநகர போலீசார் மற்றும் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகர் முழுவதும் நேற்று ஒரேநாளில் மது, புகையிலைப் பொருட்கள் விற்றதாக 65 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் மற்றும் கிலோகணக்கில் புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், சட்டவிரோத மது விற்பனை, கடைகளில் புகையிலைப்பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.