• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மனு

December 27, 2021 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளும் உரிமைகளையும் அரசு நிறைவேற்றி தர முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர்.

2016ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஓய்வூதியத்திற்கு அரசாங்கம் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவப்படியை 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டும் என கூறிய அவர்கள் தமிழகம் முழுவதும் 85000 க்கும் மேற்ப்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நிறைவேற்றவில்லை என்றால் சென்னையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க