• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

December 26, 2021 தண்டோரா குழு

பிரபல பின்னணி பாடகர் மற்றும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளவர் மாணிக்க விநாயகம். இவர் சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது.

மயிலாடுதுறையில் 1948 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமையா பிள்ளையின் இளைய மகனாக பிறந்தார். இவருடைய இசை குருவாக சி.எஸ்.ஜெயராமன் இருந்துள்ளார். அவரிடம் இருந்து இசை பயின்று 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இவர் பாடியுள்ளார்

மேலும் படிக்க