December 24, 2021
தண்டோரா குழு
கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு
மஞ்சள் பையை ஆதரித்து தேவராஜ் என்ற பெரியவர் கிருஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அப்பகுதியில் வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சள் பையை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கோவையில் கிருஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தனது பேரனுடன் கிருஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழக அரசின் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம் நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கோவை சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் இவர் தனது பேரன் முகுந்தன் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து தேவராஜ் கூறும் போது,
தமிழக முதல்வர் நேற்று மஞ்சப்பை விழிப்புணர்வை தொடங்கி வைத்ததாகவும் இதற்கு ஆதரவு தெரிவித்து கிறிஸ்துமஸ் வருவதால் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தானும் தன்னுடைய பேரனும் வந்ததாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை பகுதியல் மஞ்சள் பையை வழங்க உள்ளதாக கூறிய அவர் அனைவரும் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.