December 21, 2021
தண்டோரா குழு
போலி கையெழுத்து மூலம் தாயின் இடத்தை தனது தாய்மாமா மற்றொருவருக்கு விற்றதாக கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை பூர்வீகமாக கொண்ட லாலி ஆண்டனி என்ற பெண்மணிக்கு கோவை மாவட்டத்தில் அரிசிபாளையம் பகுதியில் 2.46 ஏக்கர் காலி இடம் இருந்ததாகவும், 2006 ல் அவர் இறந்து விட்டதால் அந்த இடத்தை பராமரிக்க லாலி ஆண்டனியின் தம்பி பென்னி என்பவருக்கு லாலி ஆண்டனியின் மகள் லியா 2013இல் பவர் கொடுத்ததாகவும், அவர் மேல் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் 2015இல் கொடுத்த பவரை ரத்து செய்து விட்டதாகவும், ஆனால் தன் தாயாரின் உயிலை வைத்து தாயாரை போன்று போலி கையெழுத்து போட்டு சிற்பி டெவலப்பர்ஸ் உரிமையாளர் வெள்ளிங்கிரி என்பவருக்கு விற்பனை செய்து விட்டதாக விட்டதாகவும், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து, போலி கையெழுத்திட்ட பென்னி மற்றும் காலி இடத்தை வாங்கிய வெள்ளிங்கிரி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவரது மகள் லியா, கணவர் ஜியோ ஜேக்கப் என்பவருடன் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.