கோவை வடவள்ளியில் உள்ள மு.க.தமிழரசு மாமியார் ஜெயலட்சுமி (82) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் கோவை வடவள்ளியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த ஜெயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
உடன், மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, செல்வி அக்கா, முரசொலி செல்வம், அருள்நிதி, தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, ராஜகண்ணப்பன், முத்துச்சாமி, பெரியகருப்பன், காந்தி, வெள்ளகோவில் சாமிநாதன், மெய்யநாதன், கீதா ஜீவன் மற்றும்
மாவட்ட பொறுப்பாளர்கள் மருதமலை சேனாதிபதி, நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், பகுதி கழக பொறுப்பாளர் வம.சண்முகசுந்தரம், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம், ஐஜி சுதாகர், டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி.செல்வநாகரத்தினம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு