• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற பெண்கள் மேம்பாடு குறித்த மாநில அளவிலான மாநாடு

December 20, 2021 தண்டோரா குழு

குட் ஷெப்பர்டு ஹெல்த் கல்வி மையம் மற்றும் டிஸ்பென்சரி அமைப்பு சார்பாக பெண்கள் மேம்பாடு குறித்த மாநில அளவிலான மாநாடு கோவையில் நடைபெற்றது.

கோவையை அடுத்த காரமடை பகுதியில் செயல்பட்டு வரும், குட் ஷெப்பர்டு ஹெல்த் கல்வி மையம் மற்றும் டிஸ்பென்சரி அமைப்பு பழங்குடியின மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் பல்வேறு நிலை சார்ந்தவர்களுக்கு மருத்துவம்,கல்வி,அத்தியாவசி தேவைகள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.ஜெர்மனி நாட்டை சேர்ந்த கே.கே.எஸ்.பி.எம்.இசட். உடன் இணைந்து நடைபெற்ற இதில், சென்னை, கோவை, மதுரை,திருச்சி,புதுவை,என பல்வேறு பகுதிகளில் இருந்து, சமூக வளர்ச்சித் துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள் சமூக அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தலைமை இயக்குனர் சகோதரி.அனில் மேத்யூ தலைமையில் நடைபெற்ற மாநாட்டை கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் மகளிர் ஆய்வு துறை பேராசிரியர் மற்றும் இயக்குனர் டாக்டர் ஜெனிதா ரோஸ்லின் மகளிர் ஆய்வுத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் கமலவேணி மற்றும் பத்மாவதி வளர்ச்சி ஆலோசகர் ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இறுதியில் கண்காணிப்பு அலுவலர் ஜோமி நன்றி கூறினார்.

மேலும் படிக்க