• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதியை பார்க்க வர வேண்டாம் – திமுக

December 17, 2016 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், அவரை பார்க்க வராமல் திமுக தொண்டர்கள் ஒத்துழைக்குமாறு அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; காவேரி மருத்துவமனையிலிருந்து உடல் நலம் தேறி, கடந்த 7-ம் தேதி அன்று இல்லம் திரும்பி ஓய்வெடுத்து வந்த தலைவர் கருணாநிதிக்கு கடந்த 15-ம் தேதி அன்று தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் காவேரி மருத்துவ மனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை அன்று காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ”தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றுக் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு மூச்சு விடுவதை இலகுவாக்குவதற்கான டிராகோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருணாநிதி மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், அவரை நேரில் பார்க்க வராமல் கழகத் தோழர்களும், நண்பர்களும், பார்வையாளர்களும் அன்புகூர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க