• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனத்தின் கோவை கிளைக்கு புதிய கட்டிட பணிகள் துவக்கம்

December 19, 2021 தண்டோரா குழு

இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனத்தின் கோவை கிளைக்கு புதிய கட்டிட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சி.எஸ்.நாகேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனம் கம்பெனி செயலர்களை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு முன்னணி கல்வி நிறுவனம். பாராளுமன்றத்தில் 1980 ம் ஆண்டில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு துவங்கப்பட்ட இது மத்திய அரசின் நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது . ஐசிஎஸ்ஐ , புதுடில்லி , மும்பை , கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மண்டலங்களைக் கொண்டது.நாடு முழுவதும் 72 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த கிளைகள் வாயிலாக கம்பெனி செயலாளர்கள் கல்வியளித்து வருகிறது. கோவையிலும் இதன் கிளை உள்ளது.பாரதியார் பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு கம்பெனி செயலர்களை உருவாக்க கல்வியளித்து வருகிறது.தற்போது கோவை கிளையின் புதிய அலுவலகம் காளப்பட்டி பகுதியில் கட்டுமான பணிகளை துவக்க இன்று அடிக்கல் நாட்டியுள்ளது.இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனத்தின் தலைவர் சி.எஸ்.நாகேந்திர ராவ் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை
சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை கிளையின் புதிய அலுவலக கட்டடம் கட்ட பணிகள் இன்று முதல் பணிகள் துவக்கப்படுகின்றன. கோவை கிளையின் கீழ் கோவை, திருப்புர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க இந்த கட்டடம் பேருதவியாக இருக்கும். வரவேற்பு அறை, அலுவலகம், நுாலகம் மற்றும் பன்பயன்பாட்டு கருத்தரங்கு அறைகளைக் கொண்டது. கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். ஒன்பது மாதங்களில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய கவுன்சில் உறுப்பினர் நரசிம்ஹான்,எஸ்.ஐ.ஆர்.சி தலைவர் பாலசுப்பிரமணியன்,
கோவையின் அத்தியாய தலைவர் துரைசாமி,செயலாளர் விஜய் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க