• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ் பி வேலுமணி உட்பட 9 எம்.எல்.ஏ.,க்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு

December 18, 2021 தண்டோரா குழு

கோவையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட 9 எம்.எல்.ஏ.,க்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், கேஆர் ஜெயராம், ஏ கே செல்வராஜ், அமுல் கந்தசாமி, தனபால், தாமோதரன், சூலூர் கந்தசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தொற்று நோயை பரப்பும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எம்எல்ஏ உள்பட 9 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 7 பேர் உள்பட மொத்தம் 16 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க