• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் 20ம் தேதி அடைப்பு போராட்டம்

December 18, 2021 தண்டோரா குழு

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் தொழில் முனைவோர் வரும் 20ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றன.இதில் தமிழகத்தில் 100 சதவீதம் சிறு,குறு தொழில்கள் முழு அடைப்பில் பங்கேற்க இருப்பதாக கோவையில் அனைத்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் தொழில் முனைவோர் வரும் 20ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றன.கோவையில் நடத்தப்படும் போராட்டம் குறித்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்தியாளர் சந்தித்தனர்.

அப்போது அந்த கூட்டமைப்பின் நிர்வாகி ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரும் 20 ம் தேதி போராட்டத்தில் கோவையில் உள்ள Cri,texmo, pricol உட்பட அனைத்து நிறுவனங்களும் முழு அடைப்பில் பங்கேற்க இருப்பதாகவும்,தமிழகத்தில் 100 சதவீதம் சிறு,குறு தொழில்கள் முழு அடைப்பு இருக்கும் என்று தெரிவித்தனர்.அகில இந்திய அளவில் 250 அமைப்புகள் இந்த முழு அடைப்பில் பங்கேற்க இருப்பதாகவும் இந்த மூலப்பொருட்கள் விலை 30 முதல் 200 சதவீதம் வரை உயர்ந்து இருக்கின்றது.

அதேபோல் பம்ப்செட் தொழில் கடும் மந்த நிலையை அடைந்து இருக்கின்றது. தொழில் முனைவோருக்கு உற்பத்தி செலவு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.என்றும்
மூலப்பொருட்கள் விலையேற்றதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்திய அளவில் இந்த ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தால் 25000 கோடி உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கோவையை பொறுத்தமட்டில் அன்று 1500 கோடி உற்பத்தி பாதிக்கப்படும். என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க