கோவை உக்கடம் பகுதியில் போதை மாத்திரை விற்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா போதை ஊசி போதை மாத்திரைகள் உள்ளிட்டவை புழக்கத்தில் விடும் நபர்களை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கைது செய்து வருகின்றனர்.
இருந்தபோதும் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை பெரியகடை வீதி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஆசீர்வாதம் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை நடத்தினர்.
அவரிடம் 45 நைட்ராசிபம் போதை மாத்திரைகள், டைடால 20 மாத்திரைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மாத்திரைகளை வலி நிவாரணியாக மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சி மூலம் உடலில் செலுத்தி சில வாலிபர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.
இந்த மாத்திரையை மறைத்து வைத்து இளைஞர்களுக்கு விற்பதற்காக வைத்திருந்த நபரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை கோட்டைமேடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் பரூக் என்பது தெரியவந்தது.தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது