• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சங்கரா கண் மருத்துவமனைக்கு UiPath ஆட்டோமேஷன் எக்சலன்ஸ் விருது

December 16, 2021 தண்டோரா குழு

பிரசித்தி பெற்ற UiPath ஆட்டோமேஷன் எக்சலன்ஸ் விருதுகள் ஒவ்வொரு வருடமும் இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த் ஆட்டோமேஷன் துறையில் முன்னனியில் உள்ள நிறுவனங்களைத் தேர்வு செய்து வழங்கப்படுகின்றன.

தற்பொழுது 2020-ம் வருடத்திற்கான விருதுகள் பல்வேறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மனித வள மேம்பாட்டுத் துறையில்; ஆட்டோமேஷனுக்கான விருதை சங்கரா கண் மருத்துவமனை பெற்றுள்ளது. இந்த உயர்ந்த விருதை நாட்டிலேயே முதன் முறையாகப் பெறும் மருத்துவமனையாக சங்கரா கண் மருத்துவமனை திகழ்கிறது.சங்கரா கண் மருத்துவமனை, உலகத் தரம் வாய்ந்த கண் சிகிச்சையை இந்திய கிராமங்களிலுள்ள மக்களுக்கு சென்றடையும் வகையில் மகத்தான சேவையை ஆற்றி வருகிறது.

இதைப் பற்றி சங்கரா கண் மருத்துவமனையின் முதன்மை மக்கள் அதிகாரி ஸ்ரீனி கார்த்திகேயன் அவர்கள் கூறுகையில்,

“பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குகொண்ட இந்த போட்டியில் சங்கரா கண் மருத்துவமனை சிறந்த தொழில்நுட்பத் துறையில் முன்னனணியில் உள்ளதற்காக இவ்விருதினை பெற்றுள்ளது எங்களுக்கு பெறும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது அனைத்து செயல்பாடுகளிலும் உன்னதத்தை அடையவேண்டுமென்ற எங்கள் லட்சியத்திற்கு கிடைத்த மற்றுமொறு அங்கீகாரமாகும்”. என்றார்.

சங்கரா கண் மருத்துவமனை சம்பள விநியோகத்தில் ரோபோட்டிக் ஆட்டோமேஷன் முறைகளை கே.ஜி. இன்பர்மேஷன் சிஸ்டம் துணை கொண்டு 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. மருத்துவத் துறையில் மனித வள மேம்பாட்டில் ஆட்டோமேஷன் வாயிலாக 240 மணி நேரத்தில் செய்யப்படும் வேலையானது வெறும் 3 மணி நேரத்திலேயே சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க