December 14, 2021
தண்டோரா குழு
கோவை ஆனைகட்டி சாலை கணுவாயை அடுத்த ராகவேந்திரா நகர் பகுதியில் மலையில் இருந்து யானை ஒன்று இறங்கி சாலையை கடக்க மலையடிவாரத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து உடனடியாக அவ்வழியில் வந்த வாகனங்களை நிறுத்தும்படி சத்தமிட்டனர்.
பிறகு யானையானது சாலையை கடந்து இல்லங்கள் இருக்கும் பகுதிக்குள் சென்றது. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியை மேற்கொண்டனர்.
நள்ளிரவு நேரங்களில் வழக்கமாக எப்பொழுதாவது இப்பகுதிக்கு வரும் யானை இன்று மாலையிலேயே வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.