December 14, 2021
தண்டோரா குழு
கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (82). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.
அப்போது சொக்கலிங்கம் கதவைத் திறந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அப்போது அங்கு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் அவரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது அவர் திருடன் என கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.