• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“மாரிதாஸ் வாழ்க”என்றும் கைகளில் “DMK ஒழிக” என்றும் எழுதி வந்தவரால் கோவையில் பரபரப்பு

December 13, 2021 தண்டோரா குழு

மாரிதாஸ் கைதை கண்டித்து நெற்றியில் “மாரிதாஸ் வாழ்க” என்றும் கைகளில் “DMK ஒழிக” என்றும் எழுதி வந்தவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்ப்பட்டது.

மாரிதாஸ் என்ற யூடியூபர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சர்ச்சையை கிளப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவு செய்ததாகவும் கூறி மதுரை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அந்த கைது சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கும் மாரிதாஸ் கைதிற்கு க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அவரது நெற்றியில் “மாரிதாஸ் வாழ்க” என்றும் கைகளில் “ஃபாரின் மதநெறி DMK சிற்றரசு ஒழிக” என்றும் எழுதி வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அவர் தான் எந்த கட்சியை சேர்ந்தவர் இல்லை என்றும் இந்தியன் என்ற உணர்விலும் தான் வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க