• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டோம் – ஹெலிகாப்டரின் இறுதி நிமிட வீடியோவை எடுத்த நபர் !

December 10, 2021 தண்டோரா குழு

முப்படை தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியது.இந்த வீடியோவை பனி மூட்டத்தால் மலைப் பகுதியில் தாழ்வாக செல்வதும் தொடர்ந்து சற்று நேரத்தில் வெடித்து சிதறும் சத்தம் கேட்க, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் அந்த வீடியோவை எடுத்தவர்கள் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோ என்கிற குட்டி மற்றும் அவருடைய நண்பர் நாசர் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது குறித்து ஜோ என்கிற குட்டி கூறுகையில்,

நான் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர் நாசர் மற்றும் அவருடைய மனைவி, பிள்ளைகளுடன் காட்டேரி வனப்பகுதியில் சுற்றுலா சென்றோம்.
அப்பகுதி நன்றாக இருக்கும் என்றும் நண்பர்கள் இரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றோம். சரியாக டிசம்பர் 8ம் தேதி 12.15 மணிக்கு திடீரென ஹெலிகாப்டர் ஒன்று வந்ததால் என்னுடைய மொபைலை எடுத்து வீடியோ எடுத்தேன்.

ஹெலிகாப்டர் மிகுந்த சத்தத்துடன் வந்ததாலும், நேரில் பார்ப்பதாலும் வியப்பில் வீடியோ எடுத்தேன். பின்பு சிறிது நேரத்தில் விழுந்ததுபோல் சத்தம் கேட்டது. என்னுடைய நண்பர் நாசர் விழுந்து விட்டதா என கேட்டார் அதற்கு நான் ஆமாம் என்றேன். மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

பின்பு அங்கிருந்து நாங்கள் காரில் கிளம்பும் போது 15 நிமிடத்தில் அங்கு ஒரு போலீஸ் ஜீப் ஒன்று வந்தது. அவரிடம் கேட்டதற்கு இங்கே நிற்கவேண்டாம் புறப்படுங்கள் எனக் கூறினார். தொடர்ந்து நானும் என்னுடைய நண்பர் குடும்பத்தினரும் அங்கிருந்து ஊட்டிக்கு புறப்பட்டோம். பின்பு இரவு தான் டிவி பார்த்து தகவலை தெரிந்துகொண்டோம்.

அதன் பிறகு அன்று இரவே நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கிருந்து காவல் நிலையத்திற்கு போக சொன்னார்கள். அதன் பிறகு தான் போலீசார் எங்கள் வீடியோவை வெளியிட்டனர். எங்களை மத ரீதியில் சித்தரசிப்பதாக கேள்விபட்டோம், அதற்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது‌. நாங்கள் சாதாரணமாக சுற்றுலா சென்றவர்கள் தான் எனக் கூறினார்.

மேலும் படிக்க