• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு !

December 8, 2021 தண்டோரா குழு

இந்திய விமான படைக்கு சொந்தமான எம்.ஐ.-17வி5 ரக ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 14 பேர் பயணம் மேற்கொண்டனர்.

இந்த ஹெலிகாப்டரானது கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.இந்நிலையில்,குன்னூர்- ஊட்டி இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிர் இழந்ததை இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், விமானி ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க