கோவை சரவணம்பட்டி நூற்பாலையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளியை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலாளர் ஒருவர் பணிபுரியும் பெண் ஒருவரை தாக்கியதில் அந்தப் பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் பல கண்டனங்கள் எழுந்த நிலையில் கோவை மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூல் ஆலை விடுதியில் நடைபெற்றது தெரியவந்தது.
அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் வேலைக்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விடுதியின் காப்பாளர் அந்தப் பெண்ணை தாக்கி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பெரும் கண்டனங்கள் எழுந்த வந்த நிலையில் சரவணம்பட்டி காவல் துறையினர் அந்த விடுதியின் காப்பாளர் லதா மேலாளர் முத்தையா ஆகிய இருவரை கைது செய்து பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு