December 2, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 59-வது வார்டில் கணபதி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதில் கணபதி நகர் பகுதியில் தெருவிளக்குகள் 18 நாட்கள் எரியாமல் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தெருவிளக்கு பணிகளை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ள கே.சி.பி. என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பழுதை சரிசெய்ய கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
மேலும் நாளொன்றுக்கு ரூ.25 வீதம் ரூ.2,250 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நடவடிக்கை எடுத்துள்ளார்.