December 1, 2021
தண்டோரா குழு
கோவை ஒப்பணைக்காரர் வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணைக்காரர் வீதியில் உள்ள அந்நிறுவன வணிக வளாகத்தில் காலை 7 மணி முதல் 6 இனோவா கார்களில் வந்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை காரணமாக இன்று காலை முதல் வணிக வளாகம் மூடப்பட்டுள்ளது.