கோவை மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் தற்போது தக்காளி விலை சரிந்து கிலோ ஒன்றிற்கு ரூ.75 முதல் 80 வரை என்று உழவர் சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உழவர் சந்தையில் ஒரு நுகர்வோருக்கு 2 கிலோ தக்காளி என்ற அளவில் வழங்வதற்கும், சுப நிகழ்வுகளுக்கு நிர்வாக அலுவலரிடம் அழைப்பிதழுடன் முன் அனுமதி பெற்ற பின்னரே கூடுதல் அளவில் தக்காளி வழங்கிட வேண்டும் என உழவர் சந்தை அலுவலர்களுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு கூடுதல் அளவில் விற்று, நுகர்வோர்களுக்கு தக்காளி கிடைக்க இயலாத பட்சத்தில் தங்களது உழவர் அட்டையை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விவசாயிகளுக்கு எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளின் தக்காளி வரத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யாமல் உழவர் சந்தைகளுக்கு கொண்டு வர அறிவுறக்கப்பட்டதால் உழவர் சந்தைகளின் மொத்த தக்காளி வரத்து அதிக ரித்து தக்காளியின் விலை மேலும் குறைய இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு