November 25, 2021
தண்டோரா குழு
தமிழக சிறைகளில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான கைதிகள் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு தண்டனை கிடைக்கப் பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று தமிழக அரசு நன்னடத்தை காரணமாகவும் அண்ணா பிறந்தநாளையொட்டி பல்வேறு சிறைகளில் உள்ள ஏராளமான கைதிகளை விடுதலை செய்தது.இந்த நிலையில் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் திடீரென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர்.