November 24, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 79வது வார்டுக்குட்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கும் சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்திட அறிவுறுத்தியுள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே மாநகராட்சி தெற்கு மண்டலம் 79வது வார்டுக்குட்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக அக்குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நடவடிக்கை எடுத்துள்ளார்.