November 24, 2021
தண்டோரா குழு
தந்தையை இழந்து வாழும் பெண் குழந்தைகளுக்கான மோடியின் மகள் திட்டம் ரூ.10,000 – க்கான காசோலையை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
கோவை மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தாண்டு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள 30 பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 த்திற்கான காசோலையை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., வழங்கினார்.