• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாட்டுக்கோழி வளர்ப்பு மோசடி – இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை

November 23, 2021 தண்டோரா குழு

நாட்டுக்கோழி வளர்ப்பு மோசடி – ரூ.1 .55 கோடி மோசடி வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 .65 கோடி அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் ஹெல்தி பவுண்டரி பார்ம்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த நாட்டுக்கோழி பண்ணை நிறுவனம் கவர்ச்சிகரமான திட்டம் மூலம் 99 முதலீட்டாளர்களிடம் ரூபாய் ஒரு கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்துள்ளது.

இந்நிறுவனம்,ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால், ஒரு செட் அமைத்து, 500 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் கொடுத்தும், அதற்கு தேவையான தீவனங்கள், மருந்துகள் கொடுத்து, மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.8500 கொடுத்து, வருட முடிவில் ஊக்கட்தொகையாக ரூ.8500 தருவதாக ஒரு திட்டமும், ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால், ஒரு செட் அமைத்து, 300 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் கொடுத்தும், அதற்கு தேவையான தீவனங்கள், மருந்துகள் கொடுத்து, மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.8500 கொடுத்து, வருட முடிவில் ஊக்கட்தொகையாக ரூ.12 ,000 தருவதாக வி.ஐ.பி., திட்டமும் என இரு கவர்சிக்கரமான திட்டங்கள் அறிவித்து மோசடி செய்துள்ளது.

இந்நிலையில்,கடந்த 2012 ல் நடந்த மோசடி தொடர்பான வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்ட்டம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நிறுவனத்தை நடத்தி வந்த கார்த்திகா மற்றும் பிரபு ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 .65 கோடி அபராதம், வழக்கில் சேர்க்கப்பட்ட 6 பேர் விடுதலை செய்ய்யப்பட்டனர்.

மேலும் படிக்க