• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக முதல்வருக்கு 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் , தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

November 23, 2021 தண்டோரா குழு

கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெற்றது. இதற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுஞ்கிலும் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச தொழில்துறை முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து, அவினாசி சாலை வழியாக கொடிசியா வந்தார்.

அப்போது, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா, பீளமேடு, ஹோப்ஸ் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் வழி நெடுங்கிலும் கழக தொண்டர்கள் மேள தாளம் முழங்கவும், பொய்கால் குதிரை ஆட்டம், போன்றவைகளை கொண்டும், பூரண கும்ப மரியாதையுடன் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், சிஆர்.இராமச்சந்திரன், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 74 ஆயிரத்து, 835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாநாட்டில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எவ.வேலு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கழக துணைப்பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா எம்பி, அந்தியூர் செல்வராஜ் எம்பி, மற்றும் சணமுகசுந்தரம் எம்பி, பிஆர்.நடராஜன் எம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க