November 23, 2021
தண்டோரா குழு
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சேட் பக்ருதீன்.கோவை குண்டு சம்பவத்தில் முன்னாள் சிறைவாசி ஆவார். இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் ஆடு திருடியாதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை பிடித்து அடித்ததாக தெரிகிறது.
இதனையடுத்து அவரை போத்தனூர் காவல் நிலையத்துக்கு சென்ற போது பக்ரூதீன் குடிபோதையில் இருந்ததால் அவரை நாளை அழைத்து வரும்படி கூறி போலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில்
நேற்று காலை பக்ரூதின் மூர்ச்சையாகி இருந்த நிலையில் இருந்ததால் அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பக்ரூதீன் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அவரது உறவினர்கள் நேற்று சிலர் தாக்கியதால் தான் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அவர்களை கைது செய்ய வலியுறித்தியும் போத்தனூர் காவல் நிலையம் முன் கூடியதால் பரப்பான சூழல் நிலவி வருகிறது.
இது குறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவும் துவங்கியுள்ளனர் .
பிரேத பரிசோதனை அறிக்கையில் தாக்கியதால் தான் உயிரிழந்திருக்கிறார் என நிரூபணமாகினால் இது கொலை வழக்காக மாறக்கூடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.