November 23, 2021
தண்டோரா குழு
கோவை கொடிசியாவில் இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் முதலீட்டாளர் முதல் முகவரி – தமிழ்நாடு நிகழ்வில் ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படுகின்றது.
இதன் மூலம் 74 ஆயிரத்து 835 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 3928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3944 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் 11681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கபடுகின்றது. வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் போடப்படுகின்றது. 485 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும் நிறுவனம் மூலம்1960 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகின்றது.
தமிழ்நாடு ஃபின்டெக் பாலிசியும், தமிழ்நாடு ஒற்றைச் சாளர கைபேசி செயலி, தமிழ்நாடு நிதி நுட்பகொள்கை 2021 ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் வெளியிடபட இருக்கின்றது.