• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, அலையன்ஸ் ஃபிரான்சைஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

November 19, 2021 தண்டோரா குழு

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, ஃபிரெஞ்ச் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் கட்டமைக்கவும், மேம்படுத்தவும்,அலையன்ஸ் ஃபிரான்சைஸ் சென்னையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. டாக்டர். விஜிலா கென்னடி, முதல்வர், கேசிஎல்எஎஸ் மற்றும் புருனோ பிளாஸ், நிர்வாக இயக்குனர், அலையன்ஸ் ஃபிரான்சைஸ் சென்னை, ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இதன் மூலம் மொழிப் பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் பிற கலாச்சார ஒத்துழைப்புகளைத் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். 16 நவம்பர் 2021 அன்று, Jean le Rond d’Alembert இன் பிறந்தநாளின் நினைவாக “Arts Libéraux En Fête” என்ற பிரெஞ்சு கலாச்சார நிகழ்வு குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எரிக் பெரோடெல் – கூட்டுறவு பிரஞ்சு மொழிக்கான இணைப்பாளர், இன்ஸ்டிட்யூட் ஃபிரான்சய்ஸ் இந்தியா, பிரெஞ்சு மொழியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் உரையை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிலாக “Les Bourgeois Gentilhomme by Moliere” இலிருந்து கிளாசிக்கல் மேற்கத்திய நடனம் மற்றும் உதவி பேராசிரியை திருமதி மாக்டலீன் கிளிபிதா டோமினிக் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரெஞ்சு மொழியில் “On écrit sur les murs” இன் மொழிபெயர்ப்பு ஆகியவை நடைபெற்றன. இந்திய மற்றும் பிரெஞ்சு தேசிய கீதத்துடன் அந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

மேலும் படிக்க