• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பேக்கரி ஒன்றில் வாங்கி திண்பண்டத்தில் புழு இருந்ததால் அதிர்ச்சி

November 19, 2021 தண்டோரா குழு

கோவையில் பேக்கரி ஒன்றில் வாங்கி திண்பண்டத்தில் புழு ஊறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் திவ்யா பேக்கரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்ற வாடிக்கையாளர்கள் குழந்தைகளுக்கு கொடுக்க Munch Nuts என்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாக்லேட் ஒன்றை வாங்கினர். 10 ரூபாய் மதிப்புள்ள அந்த சாக்லேட்டை பிரித்து பார்த்த போது அந்த சாக்லேட் முழுவதும் புழு ஊறியுள்ளது. இதை பார்த்ததும் வாடிக்கையாளர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது.

தொடர்ந்து இது குறித்து பேக்கரி நிர்வகத்திடம் கேள்வி எழுப்பியபோது “தெரியாமல் நடந்துவிட்டது” என்று மழுப்பலான பதிலை கொடுத்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அந்த சாக்லேட்டை வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் சூழலில், பெரு முதலாளிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதை உணவு பாதுகாப்புத்துறை கண்டித்து களையெடுக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க