November 18, 2021
தண்டோரா குழு
கோவையில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க கோவை மாநகர் மாவட்டம் வேலாண்டிபாளையம் மண்டல் 21 வது வார்டு சார்பில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்தும், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்துதர கோரியும் கோவை 21 வது வார்டு பூசாரிபாளையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ஜ.க கோவை மாவட்ட பட்டியல் அணி தலைவர் ஜெ.சி.விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய பா.ஜ.க பட்டியல் அணி தலைவர் ஜெ.சி.விவேக்,
மக்களின் அடிப்படை வசதிகளையும், இடிக்கப்பட்ட கோவில்களை திரும்பி கட்டி தரவில்லையென்றால் பாஜக சார்பில் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துனைத்தலைவர் கோவிந்தராஜ்,வேலாண்டிபாளையம் மண்டல் தலைவர் கார்த்தி,செயலாளர் முனியப்பன், மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் முத்துகுமார், தவமணி, கரிகாலன்,அரவிந்த் சுரேஷ், மோகன்ராஜ்,பன்னீர் மற்றும் 21 வார்டை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.