• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உயிரிழந்தது இலங்கை நிழல் உலக தாதா தான் டி.என்.ஏ பரிசோதனையில் உறுதி

November 16, 2021 தண்டோரா குழு

கோவையில் உயிரிழந்தது இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காதான் என டி.என்.ஏ பரிசோதனையில் உறுதியானது.

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி கோவை சேரன் மாநகரில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் மாராடைப்பால் உயிரிழந்தார்.பெயர் , முகவரி உட்பட போலியான ஆவணங்கள் மூலம் கோவையில் பிரேத பரிசோதனை செய்து மதுரையில் அங்கொட லொக்காவின் உடல் எரிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இறந்தது அங்கொட லொக்காதான் என்பதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய DNA பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் கொரொனா தொற்று காரணமாக பணிகள் முடங்கியது. இந்நிலையில் இலங்கை அரசின் உதவியுடன் அங்கொடா லொக்காவின் தாயார் சந்திரிகா பெரேராவின் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு , அங்கொட லொக்காவின் DNA மாதிரிகளிடன் ஓப்பீடு செய்யப்பட்டதில் இறந்தது அங்கொட லொக்காதான் என முடிவுகள் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க