November 16, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வீட்டினை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். மழைக்காலம் என்பதால் கோவை மாநகராட்சி பகுதியில் தினந்தோறும் 14 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.