• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ஐந்தாவது தேசிய உயர் கல்வி மாநாடு தொடக்கம்

November 12, 2021 தண்டோரா குழு

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இரண்டு நாள் தேசிய உயர் கல்வி மாநாடு கோவையில் இன்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.காளிராஜ் கலந்துகொண்டு மாநாட்டினை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் இவர் பேசியபோது,

தொழில் நிறுவனங்களில் உள்ள உற்பத்தி முறை புதிய டிஜிட்டல் பயன்பாட்டுடன் மாறியுள்ளது. அதற்கு ஏற்ப மாணவர்களை கல்வி நிறுவனங்கள் தயார் செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களை இணைத்து கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர சரியான நகரம் கோவை ஆகும். அதேபோல் இந்திய அளவில் தேசிய தரத்தைப் பெற்ற கல்லூரிகளில் தமிழ்நாட்டில் அதிக அளவில் கோவையைச் சார்ந்த கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளது.இதை சரியாக பயன்படுத்தி பன்னாட்டு மாணவர்களை கோவையில் கல்வி பயில கவர வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை உறுதியாக மாற்றத்தினை ஏற்படுத்த உள்ளது. கல்வித் துறையின் வளர்ச்சிக்கு நம் நாட்டில் உள்ள தற்போதைய திட்டங்களில் உள்ள சிறப்பான செயல்கள் பயன்பாட்டிற்கு பின்பற்றலாம், அது மட்டும் இன்றி பன்னாட்டு நாடுகளில் உள்ள கல்விக் கொள்கையில் உள்ள சிறந்த அம்சங்களை நாமும் பயன் படுத்துவதில் முன் வரவேண்டும். அப்பொழுதுதான் சர்வதேச தரத்திற்கு நம் நாட்டின் கல்வி நிறுவனங்களை மாற்ற முடியும்.

கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பட்ஜெட்டில் கல்வி நிறுவனங்கள் அந்த பகுதிகளில் உள்ள அனைத்து விதமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பிற நிறுவனங்களை இணைத்து செயல்படும் பசை நிதி திட்டத்தை(Glue Grant) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு கோவை மிக உகந்த நகரம். இங்கு பல்வேறு நிறுவனங்கள் சிறப்பாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது.

பாரதியார் பல்கலைக்கழகம் இங்குள்ள பலதரப்பட்ட அணைத்து நிறுவனங்களை இணைத்து பசை நிதியினை உருவாக்கி கல்வித்துறையில் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தினை கொண்டு வரவுள்ளது. இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் காப்பு உரிமையை பொருட்களாக மாற்றுங்கள். ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு இருக்க வேண்டும். தற்போதைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 90 சதவீதம் பேர் தொழில் நிறுவனங்களின் தேவையை புரிந்து படிப்பினை தேர்வு செய்கின்றனர். இதனால் கலை அறிவியல் கல்லூரிகளில் அதிகம் பேர் சேர்கின்றனர்.

நாட்டின் கல்வி திட்டத்தின் எதிர்பார்ப்பினை தமிழ் நாடு சிறப்பாக செய்து வருகிறது. இதற்காக நிர்ணயிக்கும் இலக்கு நாம் தமிழ் நாட்டில் எப்பொழுதே அடைந்து விட்டோம். தற்போது இதில் முழு தரத்தை கொண்டு வர நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனக் கூறினார்.

முன்னதாக இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை துணைத் தலைவர் எஸ்.பிரசாந்த் வரவேற்புரை ஆற்றினார். இதில் இவ்வமைப்பின் கல்வி முயற்சி பிரிவின் துணைத் தலைவர் ஆர்.நந்தினி மாநாடு கருத்தினை பற்றி பேசினார். முடிவில் இதன் கல்வி பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். விஜிலா கென்னடி முடிவுரை ஆற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று பேசினார்கள். இதில் பல கல்வி நிறுவனங்களில் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து வல்லுநர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க