November 11, 2021
தண்டோரா குழு
கோவை செட்டிபாளையம் ஓராட்டுகுப்பை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மகன் சர்வேஸ்வரன் (8). தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.
மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் வேனில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். வீட்டின் அருகே வேனில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்றான். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் சர்வேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.