• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஒலம்பஸ் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு

November 10, 2021 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் வாலாங்குளம் உபரி நீர் ஆறாக ஓடும் பகுதிகளை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் பார்வையிட்டார்.

கோவையில் பெய்துவரும் கனமழையால் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வாலாங்குளம் உபரி நீர் மற்றும் கழிவுநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.கழிவுநீர் வழிபாதைகளை பராமரிக்காததால் சாலையில் துற்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

சாலையில் ஓடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் நோய்தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக அச்சபடுகிறார்கள்.இந்த தகவலை அறிந்த கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாலாங்குளம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளை, ரோடுகளில் ஓடும் உப நீர்களை நேரில் பார்த்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உடனடியாக இதை சீர் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க