• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புலியகுளம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி

November 8, 2021 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு துணைத்தலைவர் தங்கவேல் அவர்களின் ஆலோசனையின் பேரில் கோவை தெற்கு தொகுதி 70 வது வார்டு பாலசுப்பிரமணியம் நகரில் கோவை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் துவக்க விழா காணொளி காட்சி மூலம் மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பின்னர், புலியகுளம் பாலசுப்ரமணியம் பகுதிக்கு நேரில் சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை மய்யம் நிர்வாகிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். கோவை மத்திய மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் சரவணன் மற்றும் வார்டு செயலாளர் வாசுதேவன் ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

இதில், துணைச் செயலாளர்கள் கார்கில் கார்த்திகேயன், சத்தியநாராயணன், தனவேந்திரன், மாநகரச் செயலாளர்கள் மணிக்கொடி, சிராஜ்தீன், வக்கீல் சீனிவாசன், சங்கீதா, உமா மகேஸ்வரி, சுரேன், மாரிமுத்து, ராபர்ட், செந்தில், ராஜ்குமார், சக்கரவர்த்தி, பாபு, அறிவழகன், முஸ்தபா, பிரியா, பார்த்திபன், ராஜா, சக்திவேல், மகேஸ்வரன் மற்றும் மய்யம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் படிக்க