• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம் 7 லட்சம் பணம் வழிப்பறி செய்த 7 பேர் கைது

November 8, 2021 தண்டோரா குழு

கோவை வடவள்ளியில் நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம் 7 லட்சம் பணம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 30ம் தேதியன்று வடவள்ளி பகுதியை சேர்ந்த நகை வியாபாரி சண்முகம் சக்தியமங்கலத்தில் இருந்து தங்க நகைகளை வாங்கி, அதை ஹால்மார்க் நகையாக மாற்ற 2 கிலோ மற்றும் 7 லட்சம் பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் வடவள்ளி பகுதியில் வந்த போது அவரை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 2 கிலோ தங்கம் மற்றும் 7 லட்சம் பணத்தை வழிப்பறி செய்தனர்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த அப்துல் ஹக்கீம், அஸ்ரப் அலி, பவானி, வெங்கடாச்சலம், பவர் சிங், தினேஷ் ராவல், ரஞ்சித் சிங் ஆகிய 7 பேரை தனிப்படை போலிசார் கைது செய்தனர்.

மேலும் இதில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க